தேசிய செய்திகள்

ஜார்கண்டில் மாடு வியாபாரிகள் கொலை, பசு பாதுகாப்பு குழு உறுப்பினர் உள்பட 5 பேர் கைது + "||" + Jharkhand Cattle Traders Murder Cow Protection Group Member Among 5 Arrested

ஜார்கண்டில் மாடு வியாபாரிகள் கொலை, பசு பாதுகாப்பு குழு உறுப்பினர் உள்பட 5 பேர் கைது

ஜார்கண்டில் மாடு வியாபாரிகள் கொலை, பசு பாதுகாப்பு குழு உறுப்பினர் உள்பட 5 பேர் கைது
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த முஹமது மஜ்லு (வயது35), அசத் கான் (வயது 15) ஆகிய 2 வியாபாரிகள் விற்பனைக்காக 8 எருமை மாடுகளை சந்தைக்கு கொண்டு சென்றனர். மறுநாள் அவர்கள் இருவரும் லத்தஹார் மாவட்டத்தில் ஜாபார் என்ற கிராமத்தில் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு, வாய் துணி வைத்து அடிக்கபட்டு ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொஙகவிடபட்டு இருந்தனர். இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது, பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

ராஞ்சி, 

ஜார்கண்டில் மாடு வியாபாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் பசு பாதுகாப்பு குழு உறுப்பினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த முஹமது மஜ்லு (வயது35), அசத் கான் (வயது 15) ஆகிய 2 வியாபாரிகள் விற்பனைக்காக 8 எருமை மாடுகளை சந்தைக்கு கொண்டு சென்றனர். மறுநாள் அவர்கள் இருவரும் லத்தஹார் மாவட்டத்தில் ஜாபார் என்ற கிராமத்தில் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு, வாய் துணி வைத்து அடிக்கபட்டு ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொஙகவிடபட்டு இருந்தனர். இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டது இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது, பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜார்கண்டில் மாடு வியாபாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் பசு பாதுகாப்பு குழு உறுப்பினர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொள்ளையடிக்கும் நோக்கத்திலே அவர் கொல்லப்பட்டு உள்ளனர் என்று போலீசார் சந்தேகித்தனர். 
 
கைது செய்யப்பட்டு உள்ள பிரசாத் சாகு சம்பவம் நடந்ததாக கூறப்படும் கிராமத்தில் பசு பாதுகாப்பு குழு உறுப்பினராக உள்ளார். 

போலீஸ் அதிகாரி அணூப் பிர்தார்யா பேசுகையில், ”குற்றவாளிகள் தங்களுடைய நோக்கமானது கொள்ளையடிப்பு என்று கூறிஉள்ளனர். தாங்கள் தூண்டிவிடப்பட்டோம் என்பதை மறுத்து உள்ளனர், அவர்களிடம் பல்வேறு கோணங்களில் விசாரணையானது நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளில் ஒருவரான பிரசாத் சாகு பசு பாதுகாப்பு குழு உறுப்பினர் என்பது மறுப்பதற்கில்லை,” என்று கூறிஉள்ளார். முன்னதாகவே இந்த குற்றவாளிகள் அப்பகுதியில் வியாபாரிகளிடம் இருந்து மாடுகளை பறித்து உள்ளனர், மிரட்டிஉள்ளனர் என்பது தெரியவந்து உள்ளது.
 
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, அவர்கள் பசு பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களா? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெறுகிறது. விரைவில் தெளிவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.