தேசிய செய்திகள்

சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் மெகபூபா - உமர் அப்துல்லா வார்த்தை போர் + "||" + Mehbooba Omar in war of words over Sainik Colony issue

சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் மெகபூபா - உமர் அப்துல்லா வார்த்தை போர்

சாய்னிக் காலனி விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் மெகபூபா - உமர் அப்துல்லா வார்த்தை போர்
ஜம்மு காஷ்மீர் மாநில இருஅவைகளிலும் சாய்னிக் காலனி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டதன் காணமாக பெரும் அமளி ஏற்பட்டது. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு(சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது. சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியது. இப்பிரச்சனையானது இன்று சட்டசபையிலும் எதிரொலித்தது.

ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சாய்னிக் காலனி விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி மெமபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா இடையே கடும் வார்த்தை போர் நேரிட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநில இருஅவைகளிலும் சாய்னிக் காலனி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டதன் காணமாக பெரும் அமளி ஏற்பட்டது. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு(சாய்னிக் காலனி) கட்டப்படுவதாக செய்திகள் வெளியாகியது. சாய்னிக் காலனி கட்டுவதற்கு மெகபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவிக்கிறது என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஏனைய கட்சிகள் எதிர்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியது. இப்பிரச்சனையானது இன்று சட்டசபையிலும் எதிரொலித்தது.

காலனி கட்டுப்படும் விவகாரம் தொடர்பான பத்திரிக்கை செய்தியை நிராகரித்த மெகபூபா எதிர்க்கட்சிகள் மற்றும் சில மீடியாக்களை விமர்சனம் செய்தார். தேவையில்லா பிரச்சனைகளை எழுப்புவது மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க செய்யும் என்றார். மேல் சபையில் பேசிய பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த துணை முதல்-மந்திரி நிர்மல் சிங் “சாய்னிக் குடியிருப்பு கட்டுவதற்காக கட்டுமான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை,” என்றார். 

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லாவின் டுவிட் செய்தியை கையில் எடுத்த மெகபூபா கடுமையாக விமர்சனம் செய்தார். வதந்திகளை பரப்புவதாக ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும் உமர் அப்துல்லா, “எதிர்க்கொள்வது அவருடைய பொறுப்பாகும், பொதுமக்கள் பிரச்சனை குறித்து சமூக வலைதளங்களில் குறிப்பிடுவதலில் இருந்து பின்வாங்கப்போவதும் கிடையாது,” என்றார். ”என்னுடைய சிறிய டுவிட் செய்தி உங்களுடைய பணியை கெடுத்துவிட்டது. உங்களுடைய மனநிலையை கெடுத்துவிட்டது. டுவிட்டரில் தகவல் வெளியிடுவதன் மூலம் உங்களுடைய பொறுப்பை உணரசெய்தால் அதனை தொடர்ந்து செய்வேன். 

நான் இதனை நிறுத்தவும் மாட்டேன், மன்னிப்பும் கேட்கமாட்டேன்,” என்று உமர் அப்துல்லா பேசினார். தொடர்ந்தும் டுவிட்டரில் தகவல்களை வெளியிட்டார். ராணுவ வீரர்களுக்கு காலனி கட்டப்படுவதாக வெளியாகிய செய்தியை சுயட்சை எம்.எல்.ஏ. அப்துல் ராஷித் அவையில் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் வந்து அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் பத்திரிக்கையில் வெளியாகிய செய்தியிலும், புகைப்படத்திலும் உண்மை தன்மை கிடையாது என்று மெகபூபா தொடர்ந்து கூறினார். அவரை பேசவிடாத வண்ணம் எதிர்க்கட்சியின் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

அவையில் மெகபூபா மற்றும் உமர் அப்துல்லா இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

“இதுபோன்ற பத்திரிக்கைகள் விரும்புவது என்ன? என்பது எனக்கு தெரியாது. மாநிலத்தை பற்றி எரிய செய்யவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்? அவர்கள் பிரசுரம் செய்வதற்கு முன்னதாக உண்மையை விசாரிக்கவேண்டும். அமைதியை சீர்குலைக்க யாராவது முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று மெகபூபா முப்தி பேசினார்.