கனத்த இதயத்தோடுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது; பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார் | திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கம் - அதிமுக.. | பேருந்து கட்டண உயர்வை கண்டித்து திருவண்ணாமலை, தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், அருப்புக்கோட்டை போன்ற பல்வேறு இடங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் | விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்பை புறக்கணித்து போராட்டம் | தற்போது நடக்கும் அதிமுக அரசை, யாராலும் அசைக்க முடியாது - நடிகர் ராமராஜன் | மாவட்டந்தோறும் ரஜினி மன்றத்துக்கு மகளிர் அணி தலைவி | அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் மீது தாக்குதல் |

தேசிய செய்திகள்

பிரசார கூட்டத்தில் ‘ஷூ’ வீச்சு; பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் காயம், போலீஸ் விசாரணை + "||" + Punjab CM Parkash Singh Badal injured in shoe attack at Lambi

பிரசார கூட்டத்தில் ‘ஷூ’ வீச்சு; பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் காயம், போலீஸ் விசாரணை

பிரசார கூட்டத்தில் ‘ஷூ’ வீச்சு; பஞ்சாப் முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் காயம், போலீஸ் விசாரணை
பிரகாஷ் சிங் பாதலின் கண் கண்ணாடி உடைந்துவிட்டது, அவருடைய கண் பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறியது என சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறிஉள்ளார். பாதல் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறினார்.


லாம்பி,

லாம்பி ‘ஷூ’ வீச்சு சம்பவத்தில் பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் காயம் அடைந்தார். 

பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 4-ம் தேதி நடைபெறுகிறது. மார்ச் மாதம் 11-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளன. மாநிலத்தில் ஆளும் சிரோன்மணி அகாலிதளம்–பாரதீய ஜனதா கூட்டணி கூட்டணி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளின் கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மாநில முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதல் முக்த்சர் மாவட்டம் லாம்பி சட்டமன்றத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பிரகாஷ் சிங் பாதல் மீது ‘ஷூ’வை வீசிவிட்டார். ஷூ பிரகாஷ் சிங் பாதலை தாக்கியது. அவருடைய கண்ணாடி உடைந்தது. அவருடைய கண்ணில் காயம் ஏற்பட்டது. 

பிரகாஷ் சிங் பாதலின் கண் கண்ணாடி உடைந்துவிட்டது, அவருடைய கண் பகுதியில் இருந்து இரத்தம் வெளியேறியது என சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறிஉள்ளார். பாதல் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறினார். ஷூவை வீசிய வாலிபரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து சென்றனர். ஷூ வீசியவர் கர்பாஷன் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் வாலிபர் கர்பாஷன் சிங் அடிப்படைவாத சீக்கிய தலைவர் அம்ரிக் சிங் அஜ்னாலாவின் சகோதரர் என தெரியவந்து உள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் தெய்வக்குற்றமாகக் சம்பவங்களால் அதிருப்தி அடைந்ததாக அவர் கூறியதாக போலீஸ் கூறிஉள்ளது.
 
கடந்த ஞாயிறு அன்று ஜலாலாபாத் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது அம்மாநில துணை முதல்-மந்திரி சுக்பீர் சிங் பாதல்  வாகனங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.