சகாரா, பிர்லா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: மோடிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி||No-Probe-Into-Sahara-Diaries-Case-Against-PM-Narendra
home
சகாரா, பிர்லா நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு: மோடிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
கருத்துகள்
1
வாசிக்கப்பட்டது
64
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
புதன், ஜனவரி 11,2017, 6:51 PM IST
பதிவு செய்த நாள்:
புதன், ஜனவரி 11,2017, 6:51 PM IST

புதுடெல்லி,  

சகாரா, பிர்லா ஆகிய நிறுவனங்களிடம் இருந்து நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல்வாதிகள் லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
 
சகாரா, ஆதித்யா பிர்லா ஆகிய நிறுவனங்களில் கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது அங்கு கிடைத்த டையிரியில் அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி மற்றும் சில அரசியல்வாதிகள் பெயர் இடம்பெற்று இருந்தது. அவற்றின் மூலம் குஜராத் முதல்-மந்திரியாக இருந்த நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி, ரூ. 60 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பான ஆவணங்கள் என டுவிட்டரில் தகவல்களையும் வெளியிட்டார். 

டெல்லி முதல் - மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இது தொடர்பான விசாரணைக்கு வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று காமன் காஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொண்டு நிறுவனம் சார்பாக பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷன் ஆஜாராகினார். கடந்த மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கேஹர் தலைமையிலான அமர்வு, உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இதையடுத்து இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

கூடுதல் ஆவணங்கள், இ-மெயில் உள்ளிட்டவற்றை தொண்டு நிறுவனம் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவ ராய் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், தற்போது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் மீது குற்றம்சாட்டும் போது போதிய ஆதாரங்கள் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் தாக்கல் செய்த ஆதாரங்கள் எதுவும் நேரடியாக இல்லை. அனைத்தும் மறைமுக குற்றசாட்டுகள் தான். வழக்கின் ஆரம்பகட்டத்திலேயே இந்த குற்றச்சாட்டு ஜோடிக்கப்பட்டவை என தெளிவாக தெரிகிறது.

 எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். உரிய ஆதாரங்களை கொண்டு வந்தால் இந்த கோர்ட்டு அதை பரிசீலிக்கும் என்றனர்.
கருத்துகள்
1
வாசிக்கப்பட்டது
64
பிரதி
Share
DailyThandhi_625x60px.gif

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
*  
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் - 1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 3191 crone
1
img
Bronze 2817 crone
2
img
Bronze 995 crone
3
img
Bronze 832 crone
4