உ.பி.யில் ஆளும் கட்சியில் பிளவு சைக்கிள் சின்னம் யாருக்கு? தேர்தல் கமி‌ஷன் 16–ந் தேதி முடிவு அறிவிக்கிறது


உ.பி.யில் ஆளும் கட்சியில் பிளவு சைக்கிள் சின்னம் யாருக்கு? தேர்தல் கமி‌ஷன் 16–ந் தேதி முடிவு அறிவிக்கிறது
x
தினத்தந்தி 13 Jan 2017 11:00 PM GMT (Updated: 13 Jan 2017 8:23 PM GMT)

உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 11–ந் தேதி தொடங்கி மார்ச் 8–ந் தேதி வரையில், 7 கட்ட தேர்தலை தேர்தல் கமி‌ஷன் அறிவித்துள்ளது.

புதுடெல்லி

இதற்கிடையே, ஆளும் சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டு, கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் தரப்பும், அவரது மகனான முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் தரப்பும் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கோருகின்றன. இது தொடர்பாக இரு தரப்பினரும் தங்களது தரப்பு ஆதாரங்களுடன் தேர்தல் கமி‌ஷனில் மனு அளித்தனர்.

அதன்பேரில் தேர்தல் கமி‌ஷன் நேற்று இரு தரப்பினரையும் விசாரணைக்கு அழைத்தது.

காலை 11.30 மணிக்கு தொடங்கிய விசாரணையில் முதலில் அகிலேஷ் யாதவ் தரப்பில் மூத்த வக்கீல் ராஜீவ் தவானும், கபில் சிபலும் ஆஜராகி வாதாடினர். முலாயம் சிங் சார்பில் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் ஆஜராகி வாதாடினார். எந்த தரப்பினரும் சைக்கிள் சின்னத்தை முடக்க வேண்டும் என்று வாதிடவில்லை.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தேர்தல் கமி‌ஷன், இது தொடர்பான தனது முடிவை திங்கட்கிழமைக்கு (16–ந் தேதி) ஒத்திவைத்தது. உத்தரபிரதேச தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ள தொகுதிகளில் வருகிற 17–ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்க இருப்பது நினைவுகூரத்தக்கது.


Next Story