சபரிமலையில் மகரஜோதி: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்


சபரிமலையில் மகரஜோதி: லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 14 Jan 2017 10:02 AM GMT (Updated: 14 Jan 2017 10:02 AM GMT)

சபரிமலையில் மகரஜோதியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

திருவனந்தபுரம்,

சபரிமலையில் மகரஜோதியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி மாலை நடை திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர். டிசம்பர் 26-ந்தேதி மண்டல பூஜை நடந்தது. அன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.

பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ந்தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தினமும் கூட்டம், கூட்டமாக இருமுடி சுமந்து வந்து, அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று மாலை  நடக்கிறது. மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து உள்ளனர். அவர்கள் ஆங்காங்கே இடம் பிடித்து, கூடாரம் அமைத்தும் முகாமிட்டு உள்ளனர்.  மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 

Next Story