”காந்தியின் பெயரால் விற்பனை செய்யப்பட்டதால் காதி பொருட்கள் விற்பனையில்லை”அரியான மந்திரி அனில் விஜ் பேச்சால் சர்ச்சை


”காந்தியின் பெயரால் விற்பனை செய்யப்பட்டதால் காதி பொருட்கள் விற்பனையில்லை”அரியான மந்திரி அனில் விஜ் பேச்சால் சர்ச்சை
x
தினத்தந்தி 14 Jan 2017 11:14 AM GMT (Updated: 14 Jan 2017 11:14 AM GMT)

மகாத்மா காந்தியின் பெயரால் விற்பனை செய்யப்பட்டதால் இதுவரை காதி பொருட்கள் சரிவர விற்பனையாகவில்லை என்று அரியான மாநில மந்திரி அனில் விஜ் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

புதுடெல்லி,

கதர் மற்றும் கிராம தொழில் வாரியம் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் டைரி மற்றும் காலண்டரில், மகாத்மா காந்தி புகைப்படத்துக்கு பதிலாக, பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.   காங்கிரசின் 50 ஆண்டு கால ஆட்சியின்போது, கதர் விற்பனை 2 சதவீதம் முதல் 7 சதவீதம்வரைதான் இருந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில், கதர் விற்பனை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு மோடி மேற்கொண்ட முயற்சிகளே காரணம் என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்தது.

அதற்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் அரியான மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவரும்,அமாநில மந்திரியுமான அனில் விஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"மகாத்மா காந்தியின் பெயரால் விற்பனை செய்யப்பட்டதால் தான் இதுவரை காதி பொருட்கள் சரியாக விற்பனையாகவில்லை. 2017 காலண்டர், டைரிகளில் மோடியின் படம் இடம் பெற்றிருப்பது நல்ல விஷயம். ரூபாய் நோட்டுக்களில் காந்தியின் படம் அச்சிடப்பட்டது முதல் அவைகள் மதிப்பிழந்து உள்ளன.

என்று கூறினார்.

அனில் விஜ்ஜின் இந்த கருத்திற்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுஜிவாலா, ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Next Story