ஆந்திராவில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி


ஆந்திராவில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி
x
தினத்தந்தி 15 Jan 2017 8:23 AM GMT (Updated: 15 Jan 2017 8:22 AM GMT)

ஆந்திராவில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. ஏராளமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.


சித்தூர், 

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. 

காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலையே நீடிக்கிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என அனைவரும் நினைத்த நிலையில் மாறாக ஜல்லிக்கட்டு விஷயத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இந்த ஆண்டு போட்டியை எப்படியும் நடத்தியே தீரவேண்டும் என பலதரப்பில் வலியுறுத்தப்பட்டது. போராட்டமும் நடைபெற்று வருகிறது. தடையை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. போலீசார் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். 

இதற்கிடையே அண்டைய மாநிலமான ஆந்திராவிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆந்திர பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் நாரவாரிபள்ளியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு உள்ளது.  நாரவாரிபள்ளியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக் கொண்டனர். 

Next Story