5 கிலோ எடை கொண்ட சிறுமியின் வயிற்றில் 9 கிலோ எடை கட்டி


5 கிலோ எடை கொண்ட சிறுமியின் வயிற்றில் 9 கிலோ எடை கட்டி
x
தினத்தந்தி 17 Jan 2017 10:40 AM GMT (Updated: 17 Jan 2017 10:40 AM GMT)

மத்தியபிரதேசத்தில் 5 கிலோ சிறுமியின் வயிற்றில் 9 கிலோ கொண்ட கட்டி இருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.


போபால்

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி  மக்பூஸ் கான் மற்றும் மதீனா இவர்களது 2 வயது மகள் ஷோகனா. இக்குழந்தை புற்று நோயால்(Wilms Tumour) பாதிக்கபட்டு இருந்தது. Wilms இந்த் புற்று நோய் சிறுவயது குழந்தைகளை தாக்ககூடிய ஒருவகை சிறுநீரக புற்றுநோய் ஆகும்.

இந்த குழந்தையின் எடை 5 கிலோ ஆகும். ஆனால் வயிற்றில் படர்ந்திருக்கும் இந்த கட்டியின் எடையானது 9 கிலோ ஆகும்.

இதனால், இந்த குழந்தையால் எழுந்து நடக்கவோ, உட்காரவோ முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளது. மேலும் இந்த கட்டியால் இக்குழந்தையின் உடலில் வலி ஏற்பட்டுள்ளது.

தற்போது இக்குழந்தையானது மத்தியபிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையின் புற்றுநோய் அறுவைசிகிச்சை மருத்துவர் சஞ்சய் மகேஷ்வரி கூறும் போது  தற்போது இக்குழந்தைக்கு ஹிமோதெரபி  சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம்.

5 தடவை இந்த சுழற்சி முறை சிகிச்சையை பின்பற்றுவோம், இந்த சிகிச்சையால் இக்கட்டியானது சிறிது சிறிதாக சுருங்க ஆரம்பிக்கும். அதன் பின்னர், அறுவை சிகிச்சை முறையில் கட்டியை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

குழந்தையின் உடல் நிலை சீரான முறையில் குணமாக கடவுளையும் மருத்துவரையும் தான் நம்பியுள்ளோம் என இக்குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இக்குழந்தையின் சிகிச்சைக்கு தேவையான பண உதவியை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சில செய்து வருகின்றன.

Next Story