உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி காங்கிரஸ் தலைவர் தகவல்


உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உறுதி காங்கிரஸ் தலைவர் தகவல்
x
தினத்தந்தி 17 Jan 2017 10:30 PM GMT (Updated: 17 Jan 2017 10:04 PM GMT)

உத்தரபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டி

புதுடெல்லி,

உத்தரபிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சிதான் உண்மையானது என்று கூறி அக்கட்சிக்கே சைக்கிள் சின்னத்தையும் ஒதுக்கியது.

இதையடுத்து அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதை காங்கிரஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் உத்தரபிரதேச மாநில பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறும்போது, “கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்பட்டு விட்டது. எனினும் இதுகுறித்த விரிவான தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்” என்றார்.

உங்கள் கூட்டணி பீகாரில் அமைந்தது போல் மெகா கூட்டணியாக இருக்குமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு, “இதற்கு நீங்கள் சிறிது காலம் பொறுத்திருக்கவேண்டும்” என்று அவர் பதில் அளித்தார். 

Next Story