சுவிஸ்சர்லாந்தில் இருந்து 540 ஜெர்சி பசுக்கள் தமிழகத்திற்கு இறக்குமதி


சுவிஸ்சர்லாந்தில் இருந்து 540 ஜெர்சி பசுக்கள் தமிழகத்திற்கு இறக்குமதி
x
தினத்தந்தி 18 Jan 2017 12:12 PM GMT (Updated: 18 Jan 2017 12:12 PM GMT)

சுவிஸ்சர்லாந்தில் இருந்து 1000 ஜெர்சி பசுக்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு சிவகங்கை மாவட்டம் சிராவயல் ஆகிய ஊர்களிலும் தமிழகத்தின் இதர பகுதிகளிலும் கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

இதனால் ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டுவரக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் தீவிர போராட்டத்தில் குதித்து உள்ளனர். குறிப்பாக அலங்காநல்லூரில் கடந்த 3 நாட்களாக போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. இரவு நேரத்திலும் இவர்களின் போராட்டம் தொடர்கிறது. இதேபோல் சென்னை மெரினா கடற்கரையிலும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வரக்கோரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  மாணவர்கள், ஐ.டி. ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுவிஸ்சர்லாந்து நாட்டில் இருந்து 540 ஜெர்சி இன பசுக்களை தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கதார் ஏர்வேஸ்க்கு சொந்தமான சரக்கு விமானத்தில் நேற்று இரவு சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2 ஆண்டுக்கு ஒருமுறை ஜெர்சி பசுக்கள் இறக்குமதி செய்வது வழக்கம் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 1000 ஜெர்சி பசுக்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டதில் 500 ஜெர்சி பசுக்கள் கொல்கத்தாவுக்கும், மீதி தமிழகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story