கிரிக்கெட் பந்து கூட ஆபத்தானது கிரிக்கெட்டை தடை செய்ய முடியுமா? சத்குரு வாசுதேவ் கேள்வி


கிரிக்கெட் பந்து கூட ஆபத்தானது கிரிக்கெட்டை தடை செய்ய முடியுமா?  சத்குரு வாசுதேவ் கேள்வி
x
தினத்தந்தி 19 Jan 2017 10:10 AM GMT (Updated: 19 Jan 2017 10:10 AM GMT)

கிரிக்கெட் பந்து கூட ஆபத்தானது தான் அதனால் கிரிக்கெட்டை தடை செய்ய முடியுமா? என சத்குரு வாசுதேவ் கேள்வி எழுப்பி உள்ளார்.

புதுடெல்லி,

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என்று பீட்டா எனும் அமைப்பு சுப்ரீம்கோர்ட்டு மூலம் தடை பெற்றுள்ளது.

இதனால் கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற் பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் எந்த ஒரு உறுதியான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இதனால் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்ற குமுறல் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய & மாநில அரசுகள் உண்மையிலேயே ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்களை பரப்பி, பகிர்ந்து கொண்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்பட பல நகரங்களில் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தி வரு கிறார்கள்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக இளைஞர்களிடம் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கிரிக்கெட் பந்து கூட ஆபத்தானது என்பதால் கிரிக்கெட்டை தடை செய்ய முடியுமா? கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் நிறைய பேர் பந்து பட்டு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஜல்லிகட்டு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story