உத்தரபிரதேசம் 3-வது கட்டமாக 69 தொகுதிகளுக்கு நாளை வாக்குபதிவு


உத்தரபிரதேசம் 3-வது கட்டமாக 69 தொகுதிகளுக்கு நாளை வாக்குபதிவு
x
தினத்தந்தி 18 Feb 2017 10:01 AM GMT (Updated: 18 Feb 2017 10:01 AM GMT)

உத்தரபிரதேச சட்டசபைக்கு நாளை 3-வது கட்டமாக 69 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

லக்னோ,

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்டமாக 73 தொகுதிகளுக்கு கடந்த 11-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக ரோகில்கண்ட் மற்றும் டரை பிராந்தியங்களை சேர்ந்த 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 67 தொகுதிகளுக்கு பிப்ரவரி 15-ம்தேதி வாக்குப்பதிவு நடந்தது.

இந்நிலையில் 3-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை தொடங்குகிறது. இதையொட்டி நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.

பரூக்காபாத், ஹர்தாய், கன்னாஜ், மெயின்பூரி, எடாவா, கான்பூர் தேஹத், கான்பூர், உன்னாவ், லக்னோ, பாராபங்கி, சீதாபூர், அவுரையா ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள 69 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு நடைபெற உள்ள  69 தொகுதிகளில் 25,603 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேச சட்டசபைக்கு நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Next Story