மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு


மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 18 Feb 2017 10:01 AM GMT (Updated: 18 Feb 2017 10:01 AM GMT)

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 1 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.

போபால்.

ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் விழும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பல நேரங்களில் குழந்தைகள் உயிருடன் மீட்கப்படுவது, மீட்பு படையினருக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சிங்குருளி அருகே உள்ள மாடா எல்லைக்கு உட்பட்ட  பெக்ரி குர்டு என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் மகன் சந்திரசேகர் (வயது 1) இவன் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டின் பின்புறம் உள்ள விவசாய நிலத்தில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு மூடாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்தான். மகனை காணாத பெற்றோர் அருகில் உள்ள இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது குழந்தை அங்கிருந்த 25 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததை கண்டு அக்குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு குழுவினருடன் வந்த போலீசார் சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். அதனை தொடர்ந்து அந்த சிறுவனுக்கு திவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story