உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் காலமானார்


உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் காலமானார்
x
தினத்தந்தி 19 Feb 2017 9:39 AM GMT (Updated: 19 Feb 2017 9:39 AM GMT)

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் (வயது 68) உடல்நலக்குறைவால் கொல்கத்தாவில் காலமானார்.

கொல்கத்தா,

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர்  (வயது 68) 19-7-1948 அன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பிறந்தார். சட்டப்படிப்ப்பு முடித்த அவர் 1973-ம் ஆண்டு வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார். கொல்கத்தாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பிரபல சிவில் மற்றும் கிரிமினல் வழக்கறிஞராக பணியாற்றினார். 1990-ம் ஆண்டு கொல்கத்தா ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜார்கண்ட் மாநில ஐகோர்ட் நீதிபதியாகவும் பணிபுரிந்து உள்ளார்.  2005-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து 2012 செப்டம்பர் முதல் 2013 ஜூலை வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். பணி ஓய்வுக்கு பிறகு அல்டமாஸ் கபிர்(68)  சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கொல்கத்தாவில் இன்று காலமானார்.

Next Story