துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்


துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 19 Feb 2017 2:43 PM GMT (Updated: 19 Feb 2017 2:42 PM GMT)

ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

புதுடெல்லி, 

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா மற்றும் உகாண்டா நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து அவர் விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அன்சாரியுடன், அவரது மனைவி சல்மா அன்சாரி, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி விஜய் சாம்ப்லா, 4 எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

ருவாண்டாவில் (செவ்வாய்க்கிழமை) வரை சுற்றுப்பயணம் செய்யும் ஹமீது அன்சாரி, அதன்பின்னர் உகாண்டா செல்கிறார். 23–ந் தேதி தனது சுற்றுப்பயணத்தை அவர் நிறைவு செய்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் குஜராத்தில் நடந்த மாநாட்டில் ருவாண்டா அதிபர் பால் கஹாமே கலந்து கொண்டார். அவரது வருகையை தொடர்ந்து துணை ஜனாதிபதி தலைமையிலான குழு ருவாண்டா சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story