அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி: தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பதில் அளித்தார் சசிகலா


அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவி: தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பதில் அளித்தார் சசிகலா
x
தினத்தந்தி 28 Feb 2017 5:51 AM GMT (Updated: 28 Feb 2017 5:51 AM GMT)

அ.தி.மு.க பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் கமிஷன் நோட்டீசுக்கு சசிகலா பதில் அளித்தார்.

சென்னை,

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓ.பி.எஸ். அணியினர் கூறி வருகிறார்கள்.  5 ஆண்டுகள் தொடர்ந்து  உறுப்பினராக இருப்பவரை மட்டுமே பொதுச் செயலாளராக தேர்வு செய்ய முடியும் என்று கட்சியில் விதி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் ஓ.பி.எஸ். அணியினர்  மைத்ரேயன் எம்.பி. தலைமையில் டெல்லி சென்று தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தனர். அதில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷன் இதுபற்றி பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். பிப்ரவரி 28-ந்தேதி (இன்று) இது தொடர்பான விசாரணை நடைபெறும். எனவே அதற்குள் பதில் அளிக்குமாறு கூறப்பட்டு இருந்தது.

இந்த நோட்டீசை ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த வக்கீல்கள் பெங்களூர் சிறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அவர்கள் சசிகலாவிடம் தேர்தல் கமிஷன் நோட்டீசை ஒப்படைத்தனர்.  தேர்தல் கமிஷன் விதித்த கெடு இன்றுடன் முடிவடை கிறது. நேற்று சசிகலா தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த நிலையில்  அ.தி.மு.க சசிகலா சார்பில் தேர்தல் ஆணையத்திடம் இன்று பதில் மனு தாக்கல் செய்யபட்டு உள்ளது. சசிகலா தரப்பில் அவரது வழக்கறிஞர் செந்தில், தலைமை தேர்தல் ஆணையத்திடம் பதில் மனுவை சமர்பித்தார்.


Next Story