மல்லையா உட்பட 10 பேரை நாடு கடத்தும் கோரிக்கை இங்கிலாந்திடம் நிலுவையில் உள்ளது: மத்திய அரசு


மல்லையா உட்பட 10 பேரை நாடு கடத்தும் கோரிக்கை இங்கிலாந்திடம் நிலுவையில் உள்ளது: மத்திய அரசு
x
தினத்தந்தி 23 March 2017 2:27 PM GMT (Updated: 23 March 2017 2:27 PM GMT)

மல்லையா உட்பட 10 பேரை நாடு கடத்தும் கோரிக்கை இங்கிலாந்திடம் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடிக்கும் மேல் கடனை செலுத்தாமல் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா உட்பட 10 பேரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் கோரிக்கை இங்கிலாந்திடம் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் வெளியுறவுத்துறை இணை மந்திரி விகே சிங் கூறியதாவது:-  இங்கிலாந்தில் இருந்து சமிராபாய் வினுபாய் படேல் என்ற ஒரே ஒரு கிரிமினல் குற்றவாளி மட்டுமே நாடு கடத்தப்பட்டுள்ளார். இன்றைய தேதி வரையில் விஜய் மல்லையா உட்பட 10 பேரை நாடு கடத்த இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு அது நிலுவையில் உள்ளது. 

கிரிமினல் குற்றத்தில் இருந்து தப்பியோடி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ள ரேமண்ட் வார்லி, ரவி சங்கரன், வேலு பூபாலம் அஜய் பிரசாத் கைதான், விரேந்திர குமார் ராஸ்டோகி மற்றும் ஆனந்த குமார் ஜெயின் ஆகியோரை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்துவிட்டது” இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தியா - இங்கிலாந்து இடையேயான நாடுகடத்தும் ஒப்பந்தம் 1993 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்த பட்டு வருவதாகவும் வி.கே சிங் தெரிவித்தார்.


Next Story