பீகாரில் அரசு பள்ளி கட்டிடத்தில் பாஜக கொடி ஏற்றிய கட்சி தொண்டர்கள்: விசாரணைக்கு உத்தரவு


பீகாரில் அரசு பள்ளி கட்டிடத்தில் பாஜக கொடி ஏற்றிய கட்சி தொண்டர்கள்: விசாரணைக்கு உத்தரவு
x

பீகாரில் அரசு பள்ளி கட்டிடத்தில் பாஜக தொண்டர்கள் அக்கட்சியின் கொடியை ஏற்றியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அராரியா(பீகார்), 

பீகாரில் உள்ள அராரியா மாவட்டத்தில்  இயங்கி வரும் அரசுப்பள்ளி ஒன்றில், உத்தர பிரதேச தேர்தலில் பாரதீய ஜனதா பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி தொண்டர்கள்  கட்சியின் கொடியை ஏற்றி பறக்கவிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

உத்தர பிரதேச சட்டப்பேரவையில் பாரதீய ஜனதா மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் கடந்த மார்ச் 11 ஆம் தேதி வெளியான நிலையில், மார்ச் 18 ஆம் தேதி அராரியா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்புகள் முடிந்து கிளம்பிய பிறகு பள்ளி வளாகத்திற்குள் பாஜக தொண்டர்கள் நுழைந்தனர். 

பள்ளி வளாகத்திற்குள் சென்ற பாஜக தொண்டர்கள் பாரதீய ஜனதா கட்சி பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் பள்ளி கட்டிடத்தில் பாரதீய ஜனதா கட்சியின் கொடியை ஏற்றினர். இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அதிகாரி பைசாபுல் ரகுமானிடம் புகார் அளித்தார்.  இதையடுத்து, விசாரணைக்கு மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். விசாரணை அறிக்கையின் முடிவின் படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.


Next Story