நம்முடைய நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ஏர்இந்தியா மேலாளர் வேதனை


நம்முடைய நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ஏர்இந்தியா மேலாளர் வேதனை
x
தினத்தந்தி 24 March 2017 6:09 AM GMT (Updated: 24 March 2017 6:09 AM GMT)

சிவசேனா எம்.பி. தாக்கிய ஏரிஇந்தியா மேலாளர் சிவகுமார் “நம்முடைய நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்,” என வேதனையுடன் கூறிஉள்ளார்.

புதுடெல்லி,

ஏர்இந்தியா விமானத்தில் புனேவில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணம் செய்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் ‘பிசினஸ்’ வகுப்பில் பயணிக்க முடியாத ஆத்திரத்தில், ஏர் இந்தியா மேலாளர் சிவகுமாரை (வயது 60) அடித்து சட்டையை கிழித்தார் எம்.பி.. மூக்கு கண்ணாடியையும் நொறுக்கினார். தனது செருப்பால், மேலாளரின் கன்னத்தில் மாறி மாறி 25 தடவை அடித்தார். இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிவசேனா எம்.பி.யின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால் சிவசேனா என்னுடன் உள்ளது என்று எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் கூறிஉள்ளார். 

அதுமட்டும் இல்லாது தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என டெல்லி போலீசுக்கு சவால் விடுத்து உள்ளார். 

ஆனால் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் பொது இடத்தில் தாக்கிய போது கடும் வேதனை அடைந்த சிவகுமார் பேசுகையில், “நம்முடைய எம்.பி.க்களின் நடத்தை மற்றம் கலாச்சாரம் இப்படியாக இருந்தால் நம்நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்,” என்றார். 

ஏர்இந்தியா மேலாளரை சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் தாக்கிய நிலையில் “அவருடன் இனி பயணிக்க கூடாது,” என விமான நிறுவனங்கள் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகியது. இன்று ஏர்இந்தியா விமானத்தில் புனே திரும்புவதற்கு ரவீந்திர கெய்க்வாட் டிக்கெட் எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில்தான் இம்முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இப்பிரச்சனை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டு உள்ளார். 


Next Story