இறைச்சி கூடங்களுக்கு சீல்! கான்பூர் உயிரியல் பூங்காவில் மிருகங்களுக்கு இறைச்சி கிடையாது


இறைச்சி கூடங்களுக்கு சீல்! கான்பூர் உயிரியல் பூங்காவில் மிருகங்களுக்கு இறைச்சி கிடையாது
x
தினத்தந்தி 24 March 2017 7:46 AM GMT (Updated: 24 March 2017 7:46 AM GMT)

உத்தரபிரதேசத்தில் இறைச்சி கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வரும்நிலையில் கான்பூர் உயிரியல் பூங்காவில் மிருகங்களுக்கு இறைச்சி இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.

கான்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களுக்கு இறைச்சி வழங்க பற்றாக்குறை நிலவுவதால் அவை பட்டினியை எதிர்நோக்க உள்ள நிலையானது ஏற்பட்டு உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்த பின்னர் சட்டவிரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்கள் சீல் வைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று இறைச்சி விற்பனை கூடங்களும் மூடப்பட்டு வருகிறது. கான்பூரில் கால்நடைகள் வெட்டப்படும் 4 இறைச்சி கூடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதனால் கான்பூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு இறைச்சியை சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. உத்தரபிரதேச முழுவதும் அதிகாரிகள் சோதனை செய்து சீல் வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 

கான்பூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் மற்றும் புலிகள் என 70 ஊன் உண்ணி விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பூங்கா நிர்வாக அதிகாரி பேசுகையில் பூங்காவில் உள்ள ஆண் ஊன் உண்ணி விலங்குகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 12 கிலோ இறைச்சியும், பெண் விலங்களுக்கு 10 கிலோ இறைச்சியும் தேவைப்படும். நாள் ஒன்றுக்கு பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு 150 கிலோ எருமை இறைச்சி வேண்டும். இறுதியாக ஒப்பந்ததார்கள் கடந்த செவ்வாய் கிழமை அன்று இறைச்சியை வழங்கினர், இன்று கொடுக்கவில்லை. கரப்பமாக உள்ள விலங்கிற்கு சிக்கன் வழங்கப்பட்டது, அதனை சாப்பிட அதற்கு விருப்பம் கிடையாது. காலையில் இருந்து விலங்குகள் இறைச்சியை சீண்டுவது கிடையாது என்று கூறிஉள்ளார். 

Next Story