வெறும் 200 கி.மீ., ரூ.180 கோடி செலவு, ஆனால் ரயில்வே லைன் போடுவதற்கு 23 வருடங்கள்!


வெறும் 200 கி.மீ., ரூ.180 கோடி செலவு, ஆனால் ரயில்வே லைன் போடுவதற்கு 23 வருடங்கள்!
x
தினத்தந்தி 24 March 2017 10:27 AM GMT (Updated: 24 March 2017 10:27 AM GMT)

தெலுங்கானாவின் நிசாமாபாத் மற்றும் கரீம்நகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பெத்தபள்ளி-நிசாமாபாத் ரயில்வே பாதையில் போக்குவரத்து துவக்கி வைக்கப்படவுள்ளது.

ஹைதராபாத்

தெலுங்கானாவின் நிசாமாபாத் மற்றும் கரீம்நகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான பெத்தபள்ளி-நிசாமாபாத் ரயில்வே பாதையில் போக்குவரத்து துவக்கி வைக்கப்படவுள்ளது. ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நாளை காணொலி மூலம் செகந்திராபாத்திலிருந்து இதனைத் துவக்கி வைப்பார். 1994 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் இத்திட்டத்தைத் துவக்கி வைத்தார். ஆகையால் 23 ஆண்டுகள் கடந்து 180 கி.மீ தூரம் கொண்ட இத்திட்டம் ரூ. 180 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இப்புதிய ரயில்வே பாதையானது நாட்டின் மிக முக்கிய ரயில்வே பாதைகளை இணைக்கும் நரம்பு மண்டலமாக விளங்கும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் இப்பாதை மராட்டிய மாநிலத்திற்கும் டெல்லிக்கும் இடையிலான பயண தூரத்தைக் குறைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் தேவரகொண்டா-ஜக்ளியர் ரயில்வே பாதை உட்பட மேலும் சில தென் மத்திய ரயில்வே திட்டங்களையும் சுரேஷ் பிரபு துவக்கி வைப்பார். அத்துடன் ஹைதராபாத் ரயில்வே நிலையத்தில் புதிய 250 கிலோவாட்ஸ் பவர் 
சூரியஒளி திட்டத்தையும், நீர்மறுசுழச்சி திட்டத்தையும் துவக்கி வைப்பார்.

Next Story