நீட் தேர்வு விவகாரம்: ரவிசங்கர் பிரசாத்துடன், அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு


நீட் தேர்வு விவகாரம்: ரவிசங்கர் பிரசாத்துடன், அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு
x
தினத்தந்தி 24 March 2017 1:56 PM GMT (Updated: 24 March 2017 1:56 PM GMT)

டெல்லியில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை தமிழக சுகாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்தை தமிழக சுகாதாரத்துறை மந்திரி விஜய பாஸ்கர் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனும் உடன் இருந்தார்.  நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என நட்டா கூறியதை அடுத்து இந்த சந்திப்பு நடந்தாக கூறப்படுகிறது.


Next Story