விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கையில் முன்னேற்றம்


விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கையில் முன்னேற்றம்
x
தினத்தந்தி 24 March 2017 9:30 PM GMT (Updated: 24 March 2017 7:34 PM GMT)

விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார்.

புதுடெல்லி

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார். அவரை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திடம் கடந்த மாதம் 8–ந் தேதி இந்தியா முறைப்படி வேண்டுகோள் கடிதம் சமர்ப்பித்தது.

இந்நிலையில், அந்த கடிதத்தில், இங்கிலாந்து வெளியுறவு மந்திரி கையெழுத்திட்டு சான்றளித்துள்ளார். விஜய் மல்லையாவுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிப்பது குறித்து பரிசீலிக்க அந்த கடிதத்தை வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இத்தகவலை மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கோபால் பக்லே நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். விஜய் மல்லையாவை நாடு கடத்தும் நடவடிக்கையில் இது ஒரு முன்னேற்றம் என்றும் அவர் கூறினார்.


Next Story