ராஜஸ்தானில் 13 வயது மாணவி 8 ஆசிரியர்கள் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்


ராஜஸ்தானில் 13 வயது மாணவி 8 ஆசிரியர்கள் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 26 March 2017 7:40 AM GMT (Updated: 26 March 2017 7:40 AM GMT)

ராஜஸ்தானில் 13 வயது மாணவி 8 ஆசிரியர்கள் கொண்ட கும்பலால் ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்து உள்ளது.

பிகானர்,

பிகானரின் நோகாவை சேர்ந்த மாணவி 2015-ம் ஆண்டு தனியார் பள்ளியில் 8 ஆசிரியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். பள்ளி நேரம் முடிந்த பின்னர் சிறப்பு வகுப்பு உள்ளதாக மாணவியை ஏமாற்றி வரவழைத்து அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இச்சம்பவத்தை அவர்கள் வீடியோவும் எடுத்து உள்ளனர். வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளனர் என்று அவருடைய தந்தை கூறிஉள்ளார். கடந்த ஒரு வருடமாக சிறுமியை தொடர்ச்சியாக அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர் என எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறுமி தொடர் பாலியல் பலாத்காரத்தினால் கர்ப்பம் அடைந்து உள்ளார், அப்போது மருந்துகளை கொடுத்து அவர்கள் கர்ப்பத்தை கலைத்து உள்ளனர் என்ற கொடூரமான சம்பவமும் நடந்து உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டுதான் சிறுமி கொடூர துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார் என்பது பெற்றோருக்கு தெரியவந்து உள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பேசுகையில், “அவர்களுடைய கொடூரமானது ஒரு வருடமாக தொடர்ந்தது, குற்றவாளிகள் என்னையும் தொல்லை படுத்தினர், மிரட்டினார்கள். என்னை என்னுடைய வீட்டை விட்டுகூட வெளியே செல்லவும், மருத்துவமனை சென்று என் மகளை பார்க்கவும் அனுமதிக்கவில்லை. பெரிய அவமானம் ஏற்படும் என பயம் கொண்டேன், அதன் காரணமாகவே நான் உடனடியாக புகார் கொடுக்கவில்லை. இறுதியாக நான் புகார் கொடுக்க முடிவு செய்தேன்,” என்று கூறிஉள்ளார். இவ்விவகாரம் வெளியே தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநில மந்திரி ராஜேந்திர ரத்தோர் பேசுகையில், இது மிகவும் அதிர்ச்சிகரமான சமபவம். மிகவும் வருத்தமானது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும், முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா விசாரணையை கண்காணித்து வருகிறார்,” என்று கூறிஉள்ளார். காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார், இதயத்தை நொறுக்கும் சம்பவம் என கூறிஉள்ளார். மாநில அரசு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திஉள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் புகார் கொடுத்துவிட கூடாது என அவர்களும் துன்புறுத்தப்பட்டு உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்து உள்ளது.


Next Story