கட்டண பாக்கி வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு நோ!... தேர்தல் ஆணையம் முனைப்பு


கட்டண பாக்கி வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு நோ!... தேர்தல் ஆணையம் முனைப்பு
x
தினத்தந்தி 26 March 2017 12:22 PM GMT (Updated: 26 March 2017 12:22 PM GMT)

மின் கட்டணம் உட்பட பல சேவைகளுக்கு கட்ட வேண்டிய கட்டணங்களை பாக்கி வைக்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த தடை விதிக்க தேர்தல் ஆணையம் முயற்சி எடுத்து வருகிறது.

புது டெல்லி

மின் கட்டணம் உட்பட பல சேவைகளுக்கு கட்ட வேண்டிய கட்டணங்களை பாக்கி வைக்கும் அரசியல் கட்சிகள் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த தடை விதிக்க தேர்தல் ஆணையம் முயற்சி எடுத்து வருகிறது.

டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களின்படி தேர்தல் ஆணையம் பல அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் வேட்பாளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் கட்டண பாக்கி வைத்திருந்தால் அவைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த முடியாது என்ற நிலையை ஏற்படுத்துவது பற்றிய தங்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி கேட்டுள்ளது. 

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் இது பற்றி கருத்து தெரிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி, “நாங்கள் நீதிமன்றத்தின் ஆணையை பரிசீலிக்கும் போது வேட்பாளர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்பதை அறிந்தோம்”. 2015 ஆம் ஆண்டு நீதிமன்றம் தேர்தல் ஆணையம் கட்டணம் பாக்கியில்லா சான்றிதழை வேட்பாளர்கள் கொடுத்துள்ளார்களா என்பதை சரிபார்க்கும்படி கூறியது. சமீபத்திய தேர்தலில் சில வேட்பாளர்களால் இவ்வாறு கட்டண பாக்கியில்லை என தெரிவிக்க முடியாததால் போட்டியிடும் வாய்ப்பினை இழந்தனர் என்றார் அவர்.

இம்மாற்றத்தை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் சேர்க்க சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. இதற்கான முடிவை இன்னும் மத்திய அரசு எடுக்கவில்லை என்றே தெரிகிறது. ஏழு அரசியல் கட்சிகள், பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் திரிணமுல் கட்சி ஆகியவையோடு பெரிய மாநிலக் கட்சிகளான சமாஜ்வாதி, அ இ அதிமுக ஆகியவையும் அரசினால் அளிக்கப்படும் பங்களாக்களை வைத்துள்ளன. இதற்கு அவை வாடகை செலுத்த வேண்டும். ஆக கட்டணம் செலுத்தாமல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை.


Next Story