ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு


ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிப்பு
x
தினத்தந்தி 27 March 2017 11:58 AM GMT (Updated: 27 March 2017 11:58 AM GMT)

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.



  முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ தனது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.    ரூ. 149 அல்லது அதற்கும் அதிகமாக டேட்டா ரீச்சார்ஜ் செய்தால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளை வழங்க உள்ளதாக பினான்ஸியல் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
 
மார்ச் 31 ஆம் தேதிக்கு முன்பு இந்த சலுகையை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அவர்களுக்கு கூடுதலாக 1 ஜிபி, 5 ஜிபி, 10 ஜிபி பயன்கள் கிடைக்கும். இந்த பலன்களை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பயன்படுத்த முடியும். ரூ. 149க்கு   கூடுதலாக 2 ஜிபியை பெற முடியும்.

303 ரூபாய் பிளான் மூலம் கூடுதலாக 5 ஜிபியை பெற முடியும். ஏற்கனவே 28 ஜிபி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது, கூடுதலாக 5 ஜிபி வழங்கப்படுகிறது.

ரூ. 499 மற்றும் அதற்கும் அதிகமான பிளான்கள் மூலம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சலுகையுடன் கூடுதலாக 10 ஜிபி வழங்கப்படுகிறது. இந்த 10 ஜிபியை பயன்படுத்தவில்லை என்றால் அடுத்த மாதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

ஏற்கனவே பிரைமில் சேரும் கடைசி தேதியை மார்ச் 30 வரை ஜியோ நீட்டித்தது குறிப்பிடத்தக்கது. பிரைமில் இணைந்தோர் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து 2.7 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாதத்திற்கு 10 ஜிபி என்கிறபோது வருடத்திற்கு 120 ஜிபி இலவசமாக வழங்குகிறது ஜியோ!

Next Story