வெப்பச் சீற்றத்தினால் சென்னை உட்பட 9 நகரங்களுக்கு பாதிப்பு


வெப்பச் சீற்றத்தினால் சென்னை உட்பட 9 நகரங்களுக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 28 March 2017 7:08 AM GMT (Updated: 28 March 2017 7:08 AM GMT)

இந்தியாவில் சென்னை உட்பட 9 நகரங்கள் வெப்பச் சீற்றத்தினால் அதிக துன்பங்களை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து ஆய்வுக்குழு ஒன்று கூறியுள்ளது.

சென்னை

இந்தியாவில் சென்னை உட்பட 9 நகரங்கள் வெப்பச் சீற்றத்தினால் அதிக துன்பங்களை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து ஆய்வுக்குழு ஒன்று கூறியுள்ளது.

இப்போது அதிக வெப்பத்தை அனுபவித்து வரும் நகரங்களில் கொல்கத்தா, சென்னை, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகியன இடம் பெற்றுள்ளன. பெங்களூர் இவற்றை விட சிறிது குறைவாகவே வெப்ப அளவுகளைக் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் தற்போது அதிக வெப்பத்தை அனுபவித்து வரும் நிலப்பரப்பு அதிகரிப்பதோடு, அடிக்கடி வெப்ப அளவுகள் அதிகரிப்பதும் நிகழும் என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது. அடுத்தப் பத்தாண்டுகளில் இந்த வெப்ப அளவு அதிகரிப்பு நிகழும் என்கின்றனர் ஆய்வுக்குழுவினர். 2015 ஆம் ஆண்டில் இருந்த வெப்ப அளவு கொல்கத்தா, கராச்சி (பாகிஸ்தான்) போன்ற நகரங்களில் ஏராளமான உயிரிழிப்புகளை ஏற்படுத்தியது. அது போன்ற வெப்ப அளவு புவி வெப்படைதல் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்போது நிகழும் என்றும் இந்த விவரம் பாரீஸ் பருவ நிலை மாற்றம் பற்றிய மாநாட்டில் விவாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையையே பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

101 பெருநகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் 44 பெரு நகரங்கள் 1.5 செல்சியஸ் டிகிரி வெப்பம் அதிகரிக்கும் போது வெப்பச் சீற்றம் இருமடங்கு அதிகரிப்பதை உணர்ந்தன. இந்த வெப்ப அதிகரிப்பு சுமார் 350 மில்லியன் மக்களை (சராசரியான மக்கள் தொகை வளர்ச்சியின் அடிப்படையில்) 2050 ஆம் ஆண்டில் கடுமையாக பாதிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். வெப்ப அளவு 1.5 செல்சியஸ் உயரும் போது மும்பையும், 2.7 செல்சியஸ் உயரும் போது ஹைதராபாத், புனே ஆகியவையும், 4 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் பெங்களூருவும் வெப்பச் சீற்றத்தால் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கின்றனர்.

உலக வெப்ப அளவு தற்போது தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 0.8 டிகிரி செல்சியஸ் கூடி வருகிறது. இது இன்னும் 0.7 டிகிரி செல்சியஸ் கூடினால் மும்பை வெப்பச் சீற்றத்தை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.


Next Story