கேஎப்சி உள்பட 500 இறைச்சி கடையை மூடியது சிவசேனா படை! செவ்வாய் திறக்கவே கூடாது


கேஎப்சி உள்பட 500 இறைச்சி கடையை மூடியது சிவசேனா படை! செவ்வாய் திறக்கவே கூடாது
x
தினத்தந்தி 29 March 2017 7:16 AM GMT (Updated: 29 March 2017 7:15 AM GMT)

குர்கானில் கேஎப்சி உள்பட 500 இறைச்சி கடைகளை மூடிய சிவசேனா படை, செவ்வாய் கிழமை திறக்கவே கூடாது என உத்தரவிட்டு உள்ளது.

குர்கான்,

அரியானா மாநிலம் குர்கானில் சைத்ரா நவராத்திரி காலமான 9 நாட்களும் இறைச்சி கடைகளை திறக்கவே கூடாது என சிவசேனா படை கேஎப்சி உள்பட 500 கடைகளை மூடிஉள்ளது. 9 நாட்களும் இந்து கடவுள் துர்க்காவிற்கான நாட்களாகும். இமாச்சல பிரதேச மாநிலம் உனா, பிலாஸ்பூர் மற்றும் காங்ரா மாவட்டங்களில் நாட்டின் பிற பகுதியில் இருந்து வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அம்மாநில அரசு செய்து உள்ளது. அசைவ உணவுகளை விற்பனை செய்யும் கடைகளுக்கு சிவசேனா நோட்டீசும் வழங்கி உள்ளது, அதில் இனி செவ்வாய் கிழமை என்றால் கடைகளை திறக்கவே கூடாது என உத்தரவிட்டு உள்ளது என இந்தியா டுடே செய்தி வெளியிட்டு உள்ளது.

குர்கான் பிராந்திய சிவசேனா பொதுச்செயலாளர் “நவராத்திரி காலங்களிலும், செவ்வாய் கிழமைகளிலும் இறைச்சி கடைகளை திறக்கவே கூடாது என உத்தரவிட்டு உள்ள சிவசேனா அசைவ உணவுகள் வழங்கும் ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது,” என கூறிஉள்ளார். பலாம் விகார், சுராத் நகர், அசோக் விகார், பாதாவுதி சவுக், சதார் பஜார் உள்பட பல பகுதியில் குவிந்த சிவசேனாவினர் இறைச்சி கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று கூறிஉள்ளனர், மேலும் கடைகளை வலுக்கட்டாயமாக மூடியும் உள்ளனர். 

சிவசேனாவின் குர்கான் பகுதி தலைவர் கவுதம் சாய்னி பேசுகையில், “இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேஎப்சி வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டு உள்ளோம், நாங்கள் அனைத்து விளக்குகளையும் அணைக்க செய்தோம், பொதுமக்களுக்காக கடையை மூடினோம்,” என கூறிஉள்ளார். 

Next Story