காஷ்மீர் அமைதியின்மை; பிரிவினைவாதிகளுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகள்! இந்தியா வியூகம்


காஷ்மீர் அமைதியின்மை; பிரிவினைவாதிகளுக்கு எதிராக மத்திய கிழக்கு நாடுகள்! இந்தியா வியூகம்
x
தினத்தந்தி 21 April 2017 10:10 AM GMT (Updated: 21 April 2017 10:09 AM GMT)

காஷ்மீர் அமைதியின்மையில் பிரிவினைவாதிகளுக்கு எதிரான நகர்வில் இந்தியா மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கிறது என தகவல்கள் வெளியாகிஉள்ளது.


 புதுடெல்லி,

காஷ்மீரில் பாதுகாப்பு படை மற்றும் பொதுமக்கள் இடையிலான சண்டைகளானது தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில், எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிரிவினைவாத இயக்கங்களுக்கு கிடைக்கும் பணத்தை தடுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புகளுக்கு பணம் கிடைப்பதை தடுக்க மத்திய கிழக்கு நாடுகளை இந்தியாவிற்கு சாதகமாக இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. காஷ்மீரின் வடக்கு கமாண்டோவிற்கு வருமாறு சமீபத்தில் ஓமன் பாதுகாப்பு செயலாளர் மொகமத் பின் நாசீருக்கு ராணுவம் அழைப்பு விடுத்து உள்ளது என தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

காஷ்மீர் வந்த அவரிடம் அங்கு பாதுகாப்பு படைகள் எதிர்க்கொள்ளும் நிலையை ராணுவம் எடுத்துரைத்து உள்ளது. பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் தூண்டுதலின் பெயரில் வன்முறயானது அதிகரித்து காணப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை எடுத்து ஏற்பட்ட வன்முறையால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இம்மாத தொடக்கத்தில் ஸ்ரீநகர் பாராளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற போதும் வன்முறை ஏற்பட்டதில் 8 பேர் பலியாகினர். பிரிவினைவாதிகள் பணம் கொடுத்து இளைஞர்களை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்துகிறார்கள். 

இப்போது பிரிவினைவாதிகளுக்கு எதிராக சாட்டையை சுழட்டும் விதமாக அவர்களுக்கு இடைக்கும் நிதியை தடைசெய்ய அரசு நடவடிக்கையில் இறங்கி உள்ளது. பேச்சுவார்த்தை கிடையாது என்பதில் உறுதியாக இருக்கும் மத்திய அரசு  அடுத்த சிலமாதங்களில் காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு நெருக்கமாக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கையை தொடங்க வாய்ப்பு உள்ளது. 

Next Story