அசைவ உணவுகளுக்கு தடை விதிக்க பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம்


அசைவ உணவுகளுக்கு தடை விதிக்க பிரதமருக்கு பீட்டா அமைப்பு கடிதம்
x
தினத்தந்தி 25 April 2017 4:48 AM GMT (Updated: 25 April 2017 4:47 AM GMT)

விலங்குகள் நல அமைப்பான பீட்டா அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடக்கும் விருந்துகளின் மெனுவில் இருந்து அனைத்து அசைவ உணவுகளுக்கு தடை விதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.

புதுடெல்லி


இது குறித்து பீட்டா அமைப்பு பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

சமீபத்தில் ஜெர்மனி  சுற்று சுழல மந்திரி அரசு விழாக்களில் மற்றும் நிகழ்ச்சிகளில் அசைவை உணவை  பரிமாற தடை விதித்தார். அதுபோல் இந்திய பிரதமர் நரேந்திரமோடி   தடை விதிக்க வழை வகுக்க வேண்டும்  என கேட்டு கொண்டு உள்ளது.

காலநிலை மாற்ற பிரச்சினைக்கும்  பசுமை இல்ல வாயுவை கட்டுபடுத்துவதிலும் இந்த நடவடிக்கை உதவும் என பீட்டா அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த் உத்தரவு மூலம் கருணை உள்ள  மற்றும் நட்புடைய ஆரோக்கியமான சுற்று சுழலுக்கு பிரதமர் மோடி முன்மாதிரியாக விளங்கலாம் என கூறி உள்ளது.

Next Story