இப்போது நான் ஏன் சிகப்பு சுழல் விளக்கை அகற்ற வேண்டும்? கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா


இப்போது நான் ஏன் சிகப்பு சுழல் விளக்கை அகற்ற வேண்டும்? கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா
x
தினத்தந்தி 25 April 2017 10:36 AM GMT (Updated: 25 April 2017 10:35 AM GMT)

இப்போது நான் ஏன் சிகப்பு சுழல் விளக்கை அகற்ற வேண்டும் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு,

இந்தியாவில் வி.ஐ.பி. கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜனாதிபதி, பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் கார்களில் இருந்து சுழலும் சிவப்பு விளக்கு அகற்றப்பட உள்ளது. இதுவரும் மே 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. அவசரகால ஊர்திகளான ஆம்புலன்ஸ், தீ தடுப்பு வாகனம் மற்றும் நீல வண்ண சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காவல் துறை வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி தன் வாகனத்தில் இருந்து சிவப்பு சுழல் விளக்கை அகற்றியதைத் தொடர்ந்து, பிற மாநில முதல்-மந்திரிகள், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் சிகப்பு சுழல் விளக்கை அகற்றினார்கள்.

இந்நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்-மந்திரி சித்தராமையா, உத்தரவு எப்போது அமலுக்கு வருகிறதோ அப்போதுதான் சிவப்பு சுழல் விளக்கை அகற்றுவேன் என கூறிஉள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “இப்போது நான் ஏன் சிகப்பு சுழல் விளக்கை அகற்ற வேண்டும்? மே மாதம் எனது காரில் இருந்து சிகப்பு சுழல் விளக்கு அகற்றப்படும். உத்தரவு எப்போது அமலுக்கு வருகிறதோ அப்போதுதான் அகற்றுவேன்,” என கூறிஉள்ளார். இதற்கு ஆதரவாக பேசிஉள்ள கர்நாடக சட்ட அமைச்சர் டிபி ஜெயசந்திரா, மீடியாக்கள் இப்பிரச்சனையை பெரிதுபடுத்த கூடாது என கூறிஉள்ளார்.

 சித்தராமையா சிவப்பு சுழல் விளக்கை அகற்றாததை சமூக வலைதள பயனாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.


Next Story