மோடி அலை கிடையாது, இவிஎம் அலைதான் தோல்வியடைந்த ஆம் ஆத்மி சமாளிப்பு


மோடி அலை கிடையாது, இவிஎம் அலைதான் தோல்வியடைந்த ஆம் ஆத்மி சமாளிப்பு
x
தினத்தந்தி 26 April 2017 6:49 AM GMT (Updated: 26 April 2017 6:48 AM GMT)

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு மோடி அலை கிடையாது என தோல்வியடைந்த ஆம் ஆத்மி சம்மாளித்து உள்ளது.


புதுடெல்லி,

டெல்லியின் வடக்கு மாநகராட்சி, தெற்கு மாநகராட்சி, கிழக்கு மாநகராட்சிகளுக்கும் கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பா.ஜனதாவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி பா.ஜனதா அமோக வெற்றியை நோக்கி பயணம் செய்கிறது. 

பா.ஜனதா வாக்கு எண்ணிக்கையில் 180 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. ஆம் ஆத்மி 45 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலிலும் பா.ஜனதா வெற்றியை தனதாக்கியது. 

இவிஎம் அலைதான்

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதற்கு மோடி அலை கிடையாது என தோல்வியடைந்த ஆம் ஆத்மி சம்மாளித்து உள்ளது.

உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநில தேர்தலின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) மோசடி செய்யப்பட்டு உள்ளது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது. இதே குற்றச்சாட்டை இப்போதும் ஆம் ஆத்மி கட்சி வைத்து உள்ளது.
 
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி மாநில தொழிலாளர் நலத்துறை மந்திரியுமான கோபால் ராய் பேசுகையில், “இது மோடியின் அலை கிடையாது, ஆனால் இவிஎம் அலை,” என கூறிஉள்ளார். இப்போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதே ஆம் ஆத்மி குற்றம் சாட்டிஉள்ளது. சமீபத்தில் டெல்லி ரஜோரி கார்டன் தொகுதியில் இடைத்தேர்தலிலும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது, ஆனால் ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது. அப்போதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி என அக்கட்சி குற்றம் சாட்டியது.


Next Story