பெண்களுக்காக குரல் கொடுப்பவர் டிரம்ப் மகள் இவான்கா பேச்சால் பெண்கள் மாநாட்டில் சலசலப்பு


பெண்களுக்காக குரல் கொடுப்பவர் டிரம்ப் மகள் இவான்கா பேச்சால் பெண்கள் மாநாட்டில் சலசலப்பு
x
தினத்தந்தி 26 April 2017 9:02 AM GMT (Updated: 26 April 2017 9:01 AM GMT)

ஜெர்மனியில் நடந்த கூட்டத்தில் பேசிய டிரம்பின் மகள் இவான்கா பெண்கள் தொடர்பான தனது தந்தையின் நிலைபாட்டை நியாயப்படுத்தியது மக்களிடம் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


டொனால்டு டிரம்பின் மகள் இவான்கா ஜெர்மனியின் பெர்லின் நகரில்  நடந்த ஜி-20 நாடுகளின் மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார்

அப்போது அவர் மேடையில் பேசுகையில், டொனால்டு டிரம்ப் குடும்பங்களை ஆதரிக்கும் மிகப்பெரிய சாம்பியன் ஆவார் .

மேலும், கடந்த ஆண்டு தேர்தலின் போது எனது தந்தை பெண்களை பற்றி ஆபாசமாக பேசியதாக காணொளி வெளியானது.

பெண்களிடம் பாலியல் ரீதியாக டிரம்ப் தவறாக நடந்து கொண்டார் எனவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால், இந்த குற்றத்தை எனது தந்தையோ அல்லது அவருடன் பணியாற்றிய பெண்களோ ஏற்று கொள்ளவில்லை என இவான்கா குறிப்பிட்டார்.

டிரம்பின் பெண்களுக்கெதிரான செயல் ஆதாரத்துடன் அப்போது கூறப்பட்ட நிலையில், அவர் மகளின் பேச்சுக்கு கூட்டத்தில் இருந்த மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தனது தந்தை, குடும்பங்களை ஆதரிக்கும் மிகப்பெரிய சாம்பியன் என்று இவான்கா வர்ணித்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் முணுமுணப்புக்கள் வெளிப்பட்டன.

Next Story