விவசாய வருமானத்திற்கு வரி விதிக்கும் எந்த திட்டமும் இல்லை: அருண் ஜெட்லி


விவசாய வருமானத்திற்கு வரி விதிக்கும் எந்த திட்டமும் இல்லை: அருண் ஜெட்லி
x
தினத்தந்தி 26 April 2017 9:28 AM GMT (Updated: 26 April 2017 9:27 AM GMT)

விவசாய வருமானத்திற்கு வரி விதிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

விவசாயம் மூலம் பெறும் வருமானத்திற்கு வரி விதிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினராக இருக்கும் பைபேக் டிப்ரோய் நேற்று ஒரு கருத்தை முன் வைத்து இருந்தார். அதில் தனிநபர் வருமான வரியை விரிவுபடுத்தும் வகையில் விவசாய வருமானத்திற்கும் வரி விதிக்கும் நடைமுறையை கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, விவசாய வருமானத்திற்கு வரி விதிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. அரசியல் அமைப்பு சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்தின் படி விவசாய வருவாய்க்கு வரி விதிக்கும் அதிகார வரம்பு மத்திய அரசிடம் இல்லை” என்றார்.

முன்னதாக அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரின் போதும் அருண் ஜெட்லி இது குறித்து தெளிவாக விளக்கம் அளித்தார். அதில், விவசாய வருமானத்திற்கு வரிகள் விதிக்கப்படவும் இல்லை. வரி விதிக்கப்போவதும் இல்லை என்றார். விவசாய வருவாய்க்கு வரி விதிப்பது என்பது மிகவும் உணர்ச்சிகரமான விஷயம் எனவும் இதுவரை ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் இதை செய்ய முன் வந்தது இல்லை எனவும் தெரிவித்தார்.


Next Story