தூய்மை இந்தியா திட்டம்:பிரதமர் நரேந்திர மோடிக்கு பில் கேட்ஸ் புகழாரம்


தூய்மை இந்தியா திட்டம்:பிரதமர் நரேந்திர மோடிக்கு பில் கேட்ஸ் புகழாரம்
x
தினத்தந்தி 26 April 2017 9:59 AM GMT (Updated: 26 April 2017 9:58 AM GMT)

’ஸ்வச் பாரத்’ திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்துள்ளார், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.

’ஸ்வச் பாரத்’ திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதற்காக, பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்துள்ளார், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.

’தூய்மை இந்தியா திட்டத்தைக் கையிலெடுத்து, அதைச் சிறப்பாகச் செயல்படுத்தி, பலரது வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி’ என, மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரருமான பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று, பில் கேட்ஸின் அதிகாரபூர்வ தளத்தில், ‘மனிதக் கழிவுகளுக்கு எதிரான போரில் இந்தியா வென்றுவருகிறது’ என்ற தலைப்பில் பில் கேட்ஸ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில், பிரதமர் மோடியை புகழ்ந்து உள்ளார்.

‘இன்று, இந்தியாவில் 30 சதவிகிதத்துக்கும் அதிகமான கிராமங்களில் திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதை மக்கள் நிறுத்தியுள்ளனர். இந்த மாதிரியான ஒரு முயற்சியை மேற்கொண்ட முதல் தலைவர் மோடியாகத்தான் இருப்பார். இந்தத் திட்டத்தை, பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே முதலில் செயல்படுத்தினார்.

மேலும் ’ஸ்வச் பாரத்’ திட்டம், அதன் வெற்றி, செயல்படுத்தப்பட்ட வீடியோக்கள் எனப் பல தகவல்களையும் தன்னுடைய கட்டுரையில் இணைத்துள்ளார். இறுதியாக, ‘நாடு சுகாதார மேம்பாட்டுடன் திகழ இந்தியாவின் முயற்சிகளைப் பல நாடுகளும் பின்பற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.



Next Story