குல்பூஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து இந்தியா மனு தாக்கல்


குல்பூஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து இந்தியா மனு தாக்கல்
x
தினத்தந்தி 26 April 2017 10:36 AM GMT (Updated: 26 April 2017 10:35 AM GMT)

குல்பூஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து இந்தியா மனு தாக்கல் செய்துள்ளது.

இஸ்லமபாத்,

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் இந்திய உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை சந்திக்க துணைத்தூதர் சந்திக்க அனுமதி தரவேண்டும் என கோரி பாகிஸ்தானுக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் மரண தண்டனையை எதிர்த்து இந்தியா மனுவும் தாக்கல் செய்துள்ளது.

பலுசிஸ்தானில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட இந்தியர் குல்பூஷன் ஜாதவை இந்திய உளவு அமைப்பான ‘ரா’–வுக்காக பணியாற்றியதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் அவருக்கு மரண தண்டனையை விதித்தது. இந்தியாவின் கடும் எதிர்ப்பை அடுத்து பின் வாங்கிய பாகிஸ்தான்,  குல்பூஷன் ஜாதவ் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் கவுதம் பிம்பாவாலே மூலமாக இந்தியா ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளது.  குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என   பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் தெஹ்னிமா ஜனுஜாவிடம்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 16-வது முறையாக இந்தியா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதேபோல், பாகிஸ்தான் நீதிமன்றத்தில் குல்பூஷன் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா மனு தாக்கல் செய்து இருப்பதாகவும் பாகிஸ்தான் ஊடக தகவல்கள் கூறுகின்றன. 

பாகிஸ்தான் ராணுவ சட்டம் பிரிவு 133(B)  -கீழ் மேல் முறையீடு செய்ய அனுமதியை இந்தியா கோரியுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவை பாகிஸ்தான் வெளியுறவு துறை செயலாளரிடம் இந்திய தூதர் வழங்கினார். கடந்த ஒராண்டில் 12க்-கும் மேற்பட்ட முறையில் குல்பூஷன் ஜாதவை சந்திக்க இந்தியா அனுமதி கேட்டும் பாகிஸ்தான் அதற்கு செவிசாய்க்கவில்லை. தொடர்ந்து இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்து வந்த நிலையில், இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது. 


Next Story