தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி


தினகரனை  5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 26 April 2017 11:05 AM GMT (Updated: 26 April 2017 11:04 AM GMT)

தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் நேற்று கைது செய்யப்பட்டார்.டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட தினகரன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார். டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி முன் தினகரன் நண்பர் மல்லிகார்ஜுனாவும் ஆஜர்படுத்தப்பட்டார் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். தினகரனுக்கு ஜாமீன் வழங்க டெல்லி காவல்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

தினகரன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்து உள்ளனர்.

தினகரனை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது.

Next Story