மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மம்தா பானர்ஜி


மேற்கு வங்காளத்தில் மாவோயிஸ்டுகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 26 April 2017 11:37 AM GMT (Updated: 26 April 2017 11:36 AM GMT)

சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் உறையச்செய்தது.


கொல்கத்தா,


நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மாவில் சிஆர்பிஎப் வீரர்கள் திடீர் தாக்குதல்கள் கொல்லப்படும் சம்பவம் தொடர் கதையாகி உள்ளது. தீவிரவாதிகள் உள்ளூர் மக்களை கேடயமாக பயன்படுத்தியும், அவர்கள் மூலம் உளவு பார்த்தும் தாக்குதலை முன்னெடுக்கிறார்கள்.

சுக்மாவில் இப்போது 25 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டு உள்ள சம்பவம் மத்திய அரசின் நக்சலைட் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் உளவுத்துறை தகவல்கள் சேகரிப்பு விவகாரம் தொடர்பாக கேள்விகளை எழ செய்து உள்ளது. இச்சம்பவத்தினை அடுத்து நக்சலைட் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தாக்குதல் வியூகங்களை மறுஆய்வு செய்ய அம்மாநில முதல்-மந்திரிகள், தலைமை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது.

இம்மாநிலங்களில் மத்திய அரசு மாவோயிஸ்ட், நக்சலைட் தீவிரவாதிகளால் சவாலை ஏற்று உள்ளநிலையில் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலே மாவோயிஸ்ட் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கு வங்காள மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கடந்த 2011-ம் ஆண்டு மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சியில் அமர்ந்தது. பிற மாநிலங்களை போன்றும் மேற்கு வங்காள மாநிலமும் அப்போது பத்து ஆண்டுகளுக்கு மேலாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் அட்டூழியங்களில் பாதிக்கப்பட்ட மாநிலங்களாகவே இருந்தது. மேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் 2009 முதல் 2011 வரையில் நடத்திய தாக்குதலிலே 500க்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்டது. மாநிலத்தில் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்த பின்னர் நக்சலைட்களை எதிர்க்கொள்ள மூன்று திட்டங்களை முன்னெடுத்தார். 

1, நக்சலைட் தீவிரவாதிகளை போலீஸ் அதிகாரிகள் அடங்கிய படையானது ஆயுதங்களுடன் எதிர்க்கொள்வது.

2, வன்முறை பாதையில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப அவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வகையில் நகர்வுகளை தொடர்ந்து செய்தார். 

3, மக்கள் மத்தியில் நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையில் இணைப்பு பாலமாக செயல்பட வியூகத்தை முன்னெடுத்தார். 

மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கு மிட்னாபூர், புருலியா மற்றும் பங்குரா பகுதிகள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக அறியப்பட்டது.

மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவியேற்று இருந்தபோது மாவோயிஸ்ட் தாக்குதல் காரணமாக வன்முறையில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. 2009 முதல் 2011 வரையில் சுமார் 500-க்கும் மேற்ட்ட உயிரிழப்புகள் நேரிட்டு இருந்தது. ஆனால் மம்தா பானர்ஜி பதவியேற்ற ஒரு வருடத்திற்குள் மாவோயிஸ்ட் தீவிரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேம்பாட்டு திட்டங்களை தொடங்கினார். இந்த பகுதிகளில் தனிப்பட்ட முறையில் திட்டங்களின் நகர்வுகளை மம்தா பானர்ஜி கண்காணித்தார். அவர்களுடைய வருமானத்தை உயரச்செய்ய விவசாயம் மற்றும் வனம் சார்ந்த உற்பத்தி பொருள் திட்டங்களில் முக்கியத்துவம் காட்டினார், உள்ளூர் மக்களுக்கு (அதிகமான மக்கள் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர்கள்) பாரம்பரியமாக வசதியாக இருக்கும் தொழில்கள் மீதும் கவனம் செலுத்தினார் மம்தா பானர்ஜி. மென்மையான போக்கை கையாண்ட மம்தா பானர்ஜி பாதுகாப்பு படையையும் கையாள தவறவில்லை.  குறிப்பிடத்தக்க வகையில் உள்ளீடுகள் வரும் போது பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், மேலும் மக்களை தூண்டிவிட செயல்படுவோரை குறிவைத்து கைதுசெய்யவும் கேட்டுக் கொண்டார். உள்ளூர் மக்கள் இடையே எந்தஒரு பீதியையும், துன்புறுத்தலையும் ஏற்படுத்தாத வண்ணம் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையை முன்னெடுக்க செய்தார். 

மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நகர்வுகள் குறித்து நம்பக்கத்தக்க தகவல்களை பெற தனது கட்சி தொண்டர்களே பணியில் இறக்கினார். அவர்கள் மூலம் தீவிரவாத செயலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் அவர் தவறவில்லை. கண்காணிப்பு குழுவையும் அமைத்து வெற்றிகரமாக செயல்படுத்தினார் மம்தா பானர்ஜி. உள்ளூர் இளைஞர்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக தகவல்களை தெரிவிக்க பயன்படுத்தினார், மாநில சிறப்பு படை போலீசில் பணியமர்த்தவும் செய்தார். அவர்கள் தீவிரவாதிகள் குறித்தான தகவல்களை சேகரித்தனர், மறைவிடங்களை கண்டறிய உதவிசெய்தனர். மம்தாவின் நேர்த்தியான நகர்வினால் மாவோயிஸ்ட்கள் அங்கு புதிய அரசுக்கு எதிராக எந்தஒரு தீவிரவாத அமைப்பையும் தொடங்க முடியாமல் சென்றது.

2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த என்கவுண்டரில் நக்சலைட் தீவிரவாத இயக்க தலைவர் கிஷான்ஜி கொல்லப்பட்டதை அடுத்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது, ஆனால் மம்தா நேர்த்தியான முறையில் அப்பிரச்சனையை கையாண்டார். மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பாதிப்பு இருந்த பகுதிகளில் மக்கள் மத்தியில் தன் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்ய அவர்களுக்கான மேம்பாட்டு திட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி முன்னெடுத்து வருகிறார். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவோயிஸ்ட் தலைவர்களையும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நடவடிக்கையை தீர்க்கமாக எடுத்தார். அவர்களுக்கும் அமைதியான வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு, பாதுகாப்பான சரண் ஆகிய நகர்வுகளை மம்தா பானர்ஜி தீர்க்கமாக செயல்படுத்தினார். இருப்பினும் மம்தா பானர்ஜியின் மீது விமர்சனங்களும் தொடர்கிறது. 


Next Story