தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் ரணில் விக்ரமசிங்கேயிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்


தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் ரணில் விக்ரமசிங்கேயிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 April 2017 1:17 PM GMT (Updated: 26 April 2017 1:16 PM GMT)

தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடம், பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்தார்.  இன்று காலை கப்பல் போக்குவரத்துத்துறை மத்திய மந்திரி நிதின் கட்கரி,வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

பிற்பகல் 2 மணி அளவில் பிரதமர் மோடியை ரணில் விக்ரம சிங்கே சந்தித்தார். அப்போது  தமிழக மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை, திரிகோணமலையில் இந்தியாவின் உதவியுடன் துறைமுகம் அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்நிலையில் டெல்லியில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடம் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தக்கூடாது.

இவ்வாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Next Story