நாடு முழுவதும் எரிபொருளுக்கு ஒரே விலையை நிர்ணயிக்கவும் - உத்தாவ் தாக்கரே


நாடு முழுவதும் எரிபொருளுக்கு ஒரே விலையை நிர்ணயிக்கவும் - உத்தாவ் தாக்கரே
x
தினத்தந்தி 26 April 2017 5:49 PM GMT (Updated: 26 April 2017 5:48 PM GMT)

நாடு முழுவதும் எரிபொருளுக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தாவ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை

உலகம் முழுதும் எரிபொருட்களின் விலை வீழ்ந்து வருகையில் இந்தியாவில் அவ்வாறு நிகழவில்லை என்று சுட்டிக்காட்டினார் தாக்கரே. ஜி எஸ் டி வரி முறை விரைவில் அமலுக்கு வருகிற சூழலில் நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறை வரவுள்ளது. அதனையொட்டி எரிபொருட்களுக்கும் நாடு முழுவதும் ஒரே விலை இருக்கும்படிச் செய்ய வேண்டும் என்றார் அவர். மாநில அரசுகள் அவரவர் வசதிக்கேற்ப எரிபொருட்கள் மீது வரி விதிப்பதால் அவற்றின் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

”நாட்டிலேயே மும்பையில்தான் எரிபொருட்களின் விலை அதிகம். இது தவறானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இச்சூழ்நிலையில் சிவசேனாவின் தூதுக்குழு ஒன்று முதல்வர் பட்னாவிஸை சந்தித்து மும்பை மாநகராட்சியின் ஆக்ட்ராய் வரி நீக்கப்படுவதால் அதனை ஈடு செய்யும் வகையில் ஐந்தாண்டுகளுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. ஜி எஸ் டி வரி விதிப்பு அமலுக்கு வரவுள்ளதால் வருடந்தோறும் சுமார் ரூ. 7000 கோடி அளவிற்கு ஆக்ட்ராய் வரியை மும்பை மாநகராட்சி இழக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. சந்திப்ப்ன் போது நாடு முழுவதும் எரிபொருட்களுக்கு ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story