மத்திய போலீஸ் படைக்கு தலைவர் நியமனம்


மத்திய போலீஸ் படைக்கு தலைவர் நியமனம்
x
தினத்தந்தி 26 April 2017 10:45 PM GMT (Updated: 26 April 2017 10:24 PM GMT)

மத்திய போலீஸ் படையின் தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராஜீவ்ராய் பட்நாகர் நேற்று நியமிக்கப்பட்டார்.

புதுடெல்லி,

மத்திய ரிசர்வ் போலீஸ் படைத்தலைவராக இருந்து வந்த கே.துர்கா பிரசாத் கடந்த பிப்ரவரி மாதம் 28–ந் தேதி ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து 2 மாதங்களாக அந்தப் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் காலியாக இருந்து வந்தது.

இந்த நிலையில், சத்தீஷ்கார் மாநிலம், சுக்மாவில் 24–ந் தேதி நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 25 பேர் கொல்லப்பட்டதற்கு அந்தப் படைக்கு தலைவர் இல்லாமல் போனதும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

இதையடுத்து அந்தப் படையின் தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராஜீவ்ராய் பட்நாகர் நேற்று நியமிக்கப்பட்டார். இவர் 1983–ம் ஆண்டின் உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ். அதிகாரிகள் அணியை சேர்ந்தவர். மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் தலைவராகவும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றிய அனுபவத்தை பெற்றுள்ளார்.

இதேபோன்று காலியாக இருந்து வந்த இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையின் தலைவராக ஆர்.கே.பிரசந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1983–ம் ஆண்டின் மேற்கு வங்காள மாநில ஐ.பி.எஸ். அதிகாரிகள் அணியை சேர்ந்தவர்.

Next Story