காஷ்மீர் பிரிவினைவாத பெண் தலைவர் ஆசியா அந்தரபி கைது


காஷ்மீர் பிரிவினைவாத பெண் தலைவர் ஆசியா அந்தரபி கைது
x
தினத்தந்தி 27 April 2017 8:41 AM GMT (Updated: 27 April 2017 9:13 AM GMT)

காஷ்மீர் பிரிவினைவாத பெண் தலைவர் ஆசியா அந்தரபி பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஆசிய அந்தரபி பொதுபாதுகாப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்கும் பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி வன்முறை தாக்குதலை நிகழ்த்தி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், உள்பட 22 சமூக வலைதளங்களை காஷ்மீர் அரசு அதிரடியாக தடை செய்துள்ளது. 22 சமூக வலை தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஒரு மாதம் அல்லது மறுஉத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த பெண் தலைவர் ஆசியா அந்திரபியை ஸ்ரீநகர் போலீசார் இன்று கைது செய்தனர்.பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காலையில்  அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும், பாதுகாப்பு படையினர் மீது பெண்கள் கல்வீசுவதற்கு தூண்டுதலாக இருந்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் வன்முறையை தூண்டியதில் ஆசியா அந்தரபி முக்கிய பங்கு வகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேவேளையில், கடந்த காலங்களில் பிடிபட்ட சில பயங்கரவாதிகள், எல்லைக்கட்டுப்பாடு கோட்டுப்பகுதியில் தங்களுக்கு பயங்கரவாத பயிற்சி அளிக்கப்படுகையில், அந்தரபியின் வெறுப்பூணர்வூட்டும் பேச்சுக்கள் அடிக்கடி  ஒலிபரப்பபடும் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story