பாலிவுட் நடிகர் வினோத் கன்னா மறைவு பிரதமர் மோடி;ரஜினிகாந்த் இரங்கல்


பாலிவுட் நடிகர் வினோத் கன்னா மறைவு பிரதமர் மோடி;ரஜினிகாந்த் இரங்கல்
x
தினத்தந்தி 27 April 2017 10:05 AM GMT (Updated: 27 April 2017 10:40 AM GMT)

பழம்பெரும் நடிகர் வினோத் கன்னா மறைவுக்கு பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவுகாரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 3-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு பாலிவுட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வினோத் கன்னா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

நடிகர் வினோத் கண்ணா மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மக்கள் மனதில் அர்ப்பணிப்புள்ள தலைவராகவும், நடிகராகவும் என்னென்றும் நிலைத்திருப்பார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

மை டியர் பிரண்ட் வினோத் கன்னாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திகிறேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story