கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி–3 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது


கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி–3 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது
x
தினத்தந்தி 27 April 2017 9:00 PM GMT (Updated: 27 April 2017 7:32 PM GMT)

அக்னி–3 ஏவுகணை சோதனை நேற்று ஒடிசா மாநிலம் தாம்ரா கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

பாலசோர்,

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய அக்னி–3 ஏவுகணை சோதனை நேற்று ஒடிசா மாநிலம் தாம்ரா கடற்கரையில் உள்ள அப்துல்கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நேற்று காலை 9.12 மணிக்கு நடத்தப்பட்ட இந்த சோதனையில் அக்னி–3 ஏவுகணை 3 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை அடைந்து சாதனை படைத்தது.

16 மீட்டர் உயரமும், 8 டன் எடையும் கொண்ட அக்னி–3 ஏவுகணை இந்தியாவின் போர் ஆயுத சொத்தாக கருதப்படுகிறது. 1.8 மீட்டர் அகலம் கொண்ட இதில் 2 நிலைகளில் திட எரிபொருள் இருக்கும். இது வழக்கமான பொருட்களுடன் அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லக்கூடியது. 1.5 டன் அளவுக்கு போர் ஆயுதங்களை ஏற்றிச்செல்லும். 3 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் மேல் உள்ள இலக்கையும் தாக்கக்கூடியது. அதாவது, இங்கு இருந்து சீனாவின் உள்பகுதியையும் எட்டும் தகுதி படைத்தது.

Next Story