கோடை விடுமுறையொட்டி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்


கோடை விடுமுறையொட்டி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 28 April 2017 4:09 PM GMT (Updated: 28 April 2017 4:09 PM GMT)

கோடை விடுமுறையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருமலை,

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். பக்தர்களுக்குப் பொருட்கள் வைப்பறைகளைக் கூடுதலாக ஏற்படுத்தி கொடுப்பது பற்றி திருமலையில் உள்ள அன்னமயபவனில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருமலை–திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் கலந்து கொண்டு பேசினார்.

கோடையையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். பக்தர்களின் பொருட்களை பாதுகாப்பாக வைக்க, திருமலையில் கூடுதலாக பொருட்கள் வைப்பறைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். விடுதி அறைகளை கட்டிக்கொடுக்கும் காணிக்கையாளர்கள் மேலாண்மைத் திட்டம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. அந்தத் திட்டத்துக்கு உருதுணையாக இருக்கும் தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story