சுஷ்மா சுவராஜுடன் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய உஸ்மா சந்திப்பு


சுஷ்மா சுவராஜுடன் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய உஸ்மா சந்திப்பு
x
தினத்தந்தி 25 May 2017 11:59 AM GMT (Updated: 25 May 2017 11:59 AM GMT)

சுஷ்மா சுவராஜுடன் பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய இந்தியா பெண் உஸ்மா சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த உஸ்மா என்ற பெண், பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தை சேர்ந்த தாகிர் அலியை மலேசியா சென்ற போது காதலித்தார்.கடந்த 1–ந் தேதி உஸ்மா, வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு துப்பாக்கி முனையில் வைத்து, உஸ்மாவை தாகிர் அலி திருமணம் செய்து கொண்டார்.ஆனால் திருமணத்திற்கு பின்னர் தான் அலியின் உண்மை முகம் உஸ்மாவுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்திய தூதரகத்தை நாடிய உஸ்மா, தாகிர் அலி ஏற்கனவே திருமணம் ஆனவர், 4 குழந்தைகளுக்கு தந்தை, அவற்றையெல்லாம் என்னிடம் மறைத்துவிட்டார்.எனது ஆவணங்களையும் கிழித்துபோட்டு என்னை உடல்ரீதியாக கொடுமைப்படுத்துகிறார் என தன்னுடைய நிலை குறித்து எடுத்துரைத்துள்ளார்.

மேலும், நான் எனது நாட்டிற்கு மீண்டும் செல்ல வேண்டும் என தூதரகம் உதவியுடன் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், உஸ்மா இந்தியா திரும்ப நீதிமன்றம் அனுமதி அளித்தது.மேலும் அவர் வாகா எல்லையை அடையும் வரையில் பாகிஸ்தான் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இதையடுத்து உஸ்மா வாகா எல்லை வழியாக இன்று இந்தியா திரும்பினார். இந்திய திரும்பிய உஸ்மா மண்ணைத்தொட்டு கும்பிட்டு நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். பின்னர்,  மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ்ஜை சந்தித்தார். உஸ்மாவின் குடும்பத்தினரும் சுஷ்மா சுவராஜ்ஜை சந்தித்தனர்.  

Next Story