ஜனாதிபதி தேர்தல்: சோனியா காந்தி, எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதரவு கோரினார் பிரதமர் மோடி


ஜனாதிபதி தேர்தல்: சோனியா காந்தி, எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதரவு கோரினார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 19 Jun 2017 9:46 AM GMT (Updated: 19 Jun 2017 9:46 AM GMT)

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் சோனியா காந்தி, எடப்பாடி பழனிச்சாமியிடம் பிரதமர் மோடி ஆதரவு கோரினார்.

புதுடெல்லி,
ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி  தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாராக பீகார் கவர்னர் ராம்நாத்கோவிந்த் அறிவிக்கப்பட்டார். இன்று நடைபெற்ற பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா வெளியிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு  ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளிக்குமாறு,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு கோரினார். 

பிரதமரின் கோரிக்கையை ஏற்று  தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் தெலுங்கனா முதல் மந்திரியுமான சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.  ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா தெரிவித்துள்ளது. 


Next Story