மத்திய பிரதேச மந்திரியை 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்


மத்திய பிரதேச மந்திரியை 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்தது தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 24 Jun 2017 9:09 AM GMT (Updated: 24 Jun 2017 10:07 AM GMT)

மத்திய பிரதேச மந்திரியை 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது

புதுடெல்லி

மத்திய பிரதேசத்தின் மூத்த மந்திரி  நரட்டோம் மிஷ்ரா இவர் தாதியா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தேர்தல் செலவு கணக்குகளில்  தவறான கணக்குகளை பதிவு செய்தற்காக தேர்தல் கமிஷன் இவரை 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து உள்ளது. மேலும் தாதியா தொகுதியை காலியாக இருப்பதாக அறிவித்து உள்ளது.

இதனை தேர்தல் ஆணைய செய்தி தொடர்பாளர்   இன்று  உறுதி செய்து உள்ளார்.

காங்கிரசை சேந்ர்த  ராஜேந்திர பார்தி முதலவர் சிவராஜ் சிங் சவுகானின் நெருங்கிய கூட்டாளியான மிஸ்ரா  2008 தேர்தல்களில் அவரது தேர்தல் செலவுகளில் சில விவரங்களைப் பதிவு செய்யவில்லை என தேர்தல் ஆணியத்தில் புகார் கூறி இருந்தார் இதன் அடிப்படியில் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது.

Next Story