உ.பி.யில் 1.5 நில ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் - முதல்வர் ஆதித்யநாத்


உ.பி.யில் 1.5 நில ஆக்கிரமிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் - முதல்வர் ஆதித்யநாத்
x
தினத்தந்தி 24 Jun 2017 7:31 PM GMT (Updated: 24 Jun 2017 7:31 PM GMT)

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் 1.5 இலட்சம் அரசு நில ஆக்கிரமிப்பாளர்களை அடையாளம் கண்டுள்ளதாக கூறினார்.

லக்னோ

சுமார் 1,53,808 பேர்வழிகள் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இவர்களில் 1,035 பேர் மீது குண்டர் சட்டமும், கும்பல் சட்டமும் போடப்பட்டுள்ளது என்றார் ஆதித்யநாத். நில ஆக்கிரமிப்பை தடுக்க ஏற்படுத்தப்பட்ட இணையதளத்தை அவர் துவக்கி வைத்து பேசும்போது இதைத் தெரிவித்தார்.

”நில ஆக்கிரம்புக்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்கும் நேர்மையான அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். நில ஆக்கிரமிப்பு எதிரான இணையதள இருந்திருந்தால் இது போன்ற சம்பவங்களை தடுத்திருக்கலாம்” என்றார் முதல்வர். நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க ஆகும் செலவையும் ஆக்கிரமிப்பாளர்களே செலுத்த வேண்டும் என்றார் முதல்வர்.

“உள்ளூர் அரசு அலுவலகங்கள் செயல்பட்டால் ஏராளமான மக்களுக்கு கணிசமாக நிவாரணம் கிடைக்கும். “ஏழைகளுக்கும், நலிந்த மக்களுக்கும் நீதி மறுக்கப்பட்டால் அரசானது பொது நலன் சார்ந்தது என்று அழைக்கப்பட முடியாது. அதிகாரிகள் செயல்படும் விதம் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்க வேண்டும்” என்றார் ஆதித்யநாத். தற்போது சுமார் 6 லட்சம் வழக்குகள் நிலுவையிலுள்ளன. இதில் பெரும்பாலான வழக்குகள் நில ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்புடையது என்றார் முதல்வர். கணினிமயமாக்கல் மூலம் வழக்குகளை விரைவில் தீர்க்க முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


Next Story